தடுப்பூசி போட்டுக்கொண்ட பினாங்கு முதல்வர்

தடுப்பூசி போட்டுக்கொண்ட பினாங்கு முதல்வர்

1 mins read
aab4f944-9ff3-49c0-8273-dd2086e6bbe7
படம்: என்எஸ்டி -

பினாங்கில் மருத்துவத் துறையச் சார்ந்தவர்களல்லாதோரில் முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டார் அம்மாநில முதல்வர் சோ கோன் இயோ.

பினாங்கு மருத்துவமனையில் இன்று காலை 10.25 மணியளவில் அவருடன் சேர்ந்து மேலும் 11 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டதில் வலி ஏதும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு ரத்த அழுத்தம் சீரானதாகக் குறிப்பிட்டார்.

தாம் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வது, தடுப்பூசி தொடர்பான நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தும் என்றார் அவர்.

முதல் கட்டமாக 31,000 முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்று திரு சோ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்