டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம்: எட்டு பேர் கைது

கோபன்­ஹே­கன்: டென்­மார்க் தலை­ந­கர் கோபன்­ஹே­க­னில் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட முடக்­க­நி­லையை எதிர்த்து நேற்று சிலர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­களில் எட்டு பேரை டென்­மார்க் போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

மேன் இன் பிளாக் எனும் அமைப்­பால் ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அதில் ஏறத்­தாழ 1,200 பேர் ஈடு­பட்­ட­தா­க­வும் டென்­மார்க் போலிஸ் கூறி­யது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களில் பல­வற்றை நீட்­டிப்­ப­தாக டென்­மார்க் அர­சாங்­கம் கடந்த வாரம் அறி­வித்­தது.

இதை­ய­டுத்து, முடக்கநிலையை எதிர்த்து முதல்­மு­றை­யாக அங்கு ஆர்ப்­பாட்­டம் நடந்துள்ளது. ஆர்ப்­பாட்­டம் பெரும்­பா­லும் அமை­தி­யான முறை­யில் நடத்­தப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் மூர்க்­கத்­த­ன­மாக நடந்­து­கொண்­ட­தற்­கா­வும் சுடர்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­தற்­கா­க­வும் எட்டு பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

முத­லில் 600 பேர் மட்­டுமே ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­தா­க­வும் ஆனால் மாலை நேரத்­திற்­குள் கோபன்­ஹே­கன் நகர மண்­ட­பத்­துக்கு முன்­பாக 1,000க்கும் மேற்­பட்­டோர் கூடி­ய­தா­க­வும் அதிகாரி­கள் கூறி­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!