நம்பிக்கையில் மலேசிய வர்த்தகர்கள்

நம்பிக்கையில் மலேசிய வர்த்தகர்கள்

1 mins read

கோலா­லம்­பூர்: தேசிய அள­வில் தடுப்­பூசி போடும் திட்­டம் முடுக்கிவிடப்­பட்­ட­தால் நாட்­டின் வர்த்­த­கர்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளித்­துள்­ளது. எனவே, நாட்­டின் பொரு­ளா­தா­ரம் நெருக்­க­டிச் சூழ­லில் இருந்து விரை­வில் மீட்­சி­பெ­றும் என்று நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் முஸ்­தபா முக­மது.

தொற்­றுக்கு எதி­ராக அதி­க­மான மலே­சி­யர்­கள் தடுப்­பூசி போட்­டுக்கொண்­டுள்­ள­னர். இது அதி­க­மா­னோர் நம்­பிக்­கை­யு­டன் வெளி­யில் சென்று பணம் செல­வ­ழிக்க வழி­வ­குத்­துள்­ளது. இந்­தச் செய்தி, முடங்­கிக்­கி­டக்­கும் வர்த்­த­கர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்­டு­வ­தாக உள்­ளது என்று அமைச்­சர் முஸ்­தபா முக­மது கூறி­னார்.