புதிய உருமாறிய கொரோனாவால் மலேசியாவில் இருவர் பாதிப்பு

புதிய உருமாறிய கொரோனாவால் மலேசியாவில் இருவர் பாதிப்பு

1 mins read
3aa0216d-eebe-4a46-9ca3-0a0e6649a2fd
சிலாங்கூர் மாநிலம் செர்டாங் நகரில் மருத்துவ ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

புதிய உருமாறிய கொரோனாவால் மலேசியாவில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வகை கிருமி இன்னும் எளிதாகப் பரவக்கூடியது என்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு அவை அடிபணிவதில்லை என்று மலேசிய மூத்த சுகாதார அதிகாரி இன்று தெரிவித்தார்.

B1525 என்று அழைக்கப்படும் இந்த வகை கிருமித்தொற்றால் துபாய்க்குப் பயணம் மேற்கொண்ட இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மலேசியாவெங்கும் கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி ஒன்பது நாட்கள் ஆகியுள்ள நிலையில், தலைநகர் கோலாலம்பூர் உட்பட பல மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மலேசிய அரசாங்கம் இன்று சற்று தளர்த்தியது.

குறிப்புச் சொற்கள்