நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

1 mins read
1885ee3b-e3b7-4743-a950-719735dfbbf1
நியூசிலாந்தின் அவசரகால நிர்வாக அமைச்சர் கிரிதாப்பு எலனுடன் (வலது) கலந்துரையாடிய நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் (இடது). படம்: ஏஎஃப்பி -

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.1ஆகப் பதிவானது.

இதனைத் தொடர்ந்து இன்று அங்கு பல நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்த நில அதிர்வுகள் ரிக்டர் அளவில் 6.4ஆகப் பதிவானது.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை.

காயமடைந்தோர் குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தென் பசிபிக்கில் உள்ள பல தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் அத்தீவுகள் சுனாமியால் பாதிக்கப்படவில்லை.