அடுத்த பரவல்: உலக நிறுவனம் எச்சரிக்கை

அடுத்த பரவல்: உலக நிறுவனம் எச்சரிக்கை

1 mins read
7e14409f-4bb7-49a8-88bb-9ef47d52d1c4
-

கூடு­த­லாக 31 நாடு­க­ளுக்கு 14.4 மில்­லி­யன் தடவை போடக்­கூ­டிய தடுப்­பூ­சியை அடுத்த வாரம் அனுப்­பு­வ­தற்­கான பணி­களில் கோவேக்ஸ் அமைப்பு ஈடு­பட்­டுள்­ளது. இவ்­வே­ளை­யில் தடுப்­பூ­சி­யால் ஏற்­பட்­டி­ருக்­கும் நம்­பிக்­கையை வீண­டித்­து­விட வேண்­டாம் என உலக சுகா­தார நிறு­வ­னம் கேட்­டுக் கொண்­டுள்­ளது. உல­கிற்கு தடுப்­பூசி மருந்­தைப் பகிர்ந்­த­ளிக்­கும் பொறுப்பை ஏற்று நடத்தும் கோவேக்ஸ், வரும் வாரத்­தில் ஏழை நாடு­களுக்கு தடுப்­பூ­சி­யை அனுப்ப உள்ளது.

இவ்­வாறு தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தன் மூலம் கொவிட்-19 கொள்­ளை­நோய் குண­மா­கி­விட்­டது என்ற எண்­ணம் மக்­க­ளுக்கு வரக்­கூ­டாது என்­றும் அடுத்­தக்­கட்ட பர­வல் எந்­நே­ரத்­தி­லும் நிக­ழக்­கூ­டும் என்­றும் உலக சுகா­தார நிறு­வ­னம் எச்­ச­ரித்துள்­ளது.