பிரிட்டிஷ் இளவரசர் ஹேரியும் அவரது மனைவி மேகனும் இன்று அந்நாட்டின் அரச குடும்பத்துடன் வாழ்ந்த தங்களது அனுபவத்தைப் பற்றி பிரபல பேட்டியாளர் ஓப்ரா வின்ஃப்ரியிடம் இன்று பேசப்போகின்றனர்.
காலஞ்சென்ற இளவரசி டயானா கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியில் முடிந்த தமது திருமணத்தைப் பற்றி தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்ததை அடுத்து இன்றைய பேட்டி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அரச குடும்பத்தைவிட்டு வெளியேறியுள்ள இளவரசர் ஹேரியும் அவர் மனைவியும் தாங்கள் அவ்வாறு ஏன் செய்துள்ளனர் என்பதைப் பற்றி திருவாட்டி வின்ஃப்ரியிடம் மனந்திறந்து பேசவுள்ளனர்.
இவர்கள் கொடுக்கப்போகும் பேட்டியால் அரச குடும்பம் பாதிக்கப்படும் என்று சிலர் கருதுகின்றனர்.

