மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் அகமது ஸாஹித் ஹமீடி மீதான கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றச்சாட்டு திருத்தப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.
தண்டனையைக் கடுமையாக்கவே தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு திருத்தப்பட்டுள்ளதாக திரு ஸாஹித் கூறினார்.

