சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையை மீண்டும் திறக்க இது வழி வகுக்கும் என்று மலேசியாவின் ஜோகூர் மாநிலம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர்- மலேசியா இடையேயான எல்லையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஜோகூர் மாநிலத்தின் சுற்றுப்பயண, இளையர், விளையாட்டுத்துறை தலைவர் ஓன் ஹஃபிஸ் கஸி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளை வரவேற்கத் தேவையான ஏற்பாடுகளை ஜோகூர் மாநில அரசு செய்துள்ளதாக அவர் கூறினார்.
"இருநாடுகளுக்கு இடையே பயணம் செய்வோரின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன," என்றார் திரு ஓன்.
வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்க ஜோகூர் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

