இஸ்கந்தர் புத்தேரி: மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசித் திட்டங்களால் இரு நாடுகளும் இந்த ஆண்டில் தங்கள் எல்லையை திறந்துவிட வழி பிறக்கும் என்று ஜோகூர் அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஜோகூர் சுற்றுலாத்துறை, இளையர் மற்றும் விளையாட்டுக் குழுவின் தலைவர் திரு ஓன் ஹாஃபிஸ் காஸி நேற்று இவ்வாறு தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்குத் தங்கள் எல்லையைத் திறந்துவிடுவதற்கு ஆன அனைத்து நடவடிக்கைகளுடனும் ஜோகூர் மாநில அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது என திரு ஓன் தெரிவித்தார்.
இருப்பினும் இதுகுறித்த முடிவு மத்திய அரசின் கையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்பவர்களின் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக திரு ஓன் கூறினார்.

