மேலும் எட்டு பேருக்கு கோரோனா

மேலும் எட்டு பேருக்கு கோரோனா

1 mins read

சிங்கப்பூரில் இன்று மேலும் எட்டு பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 60,070ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட எட்டு பேரில் இருவருக்கு சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

எஞ்சிய ஏழு பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்கள் சிங்கப்பூர் வந்தடைந்ததும் அவர்களுக்கு இல்லத்தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கு விடுதிகளில் யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை.

பத்து பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் இந்தியாவிலிருந்து வந்த 5 வயது சிறுமியும் ஒருவர்.

சிறுமியிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறியும் ஏதும் இல்லை.

ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் அச்சிறுமி நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிய நிரந்தரவாசிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த சார்ந்திருப்போருக்கான அட்டை வைத்திருக்கும் ஒருவருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

பங்ளாதேஷ், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த நான்கு வேலை அனுமதி அட்டை ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்