ஆஸ்ட்ரசெனிகா தடுப்பூசியின் பயன்பாட்டை ஒத்திவைக்கும் தாய்லாந்து

ஆஸ்ட்ரசெனிகா தடுப்பூசியின் பயன்பாட்டை ஒத்திவைக்கும் தாய்லாந்து

1 mins read
db02854a-8a68-4655-b1a1-44b1e4ea4e00
ஆஸ்ட்ரசெனிகா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டத்தை தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா உள்ளிட்ட அமைச்சர்கள் ஒத்திவைத்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஆஸ்ட்ரசெனிகா நிறுவனம் தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசியின் பயன்பாட்டை ஒத்திவைக்க தாய்லாந்து அரசாங்கம் தள்ளிவைத்துள்ளது.

ஐரோப்பாவில் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு ரத்தம் கட்டிக்கொண்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்கு தாய்லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.

ஐரோப்பாவுக்கு வெளியே ஆஸ்ட்ரசெனிகா தடுப்பூசி மருந்தின் பயன்பாட்டைத் தள்ளிவைக்கும் முதல் நாடு தாய்லாந்து. இந்நிலையில், கனடா, ஆஸ்திரேலியா, பிலிப்பீன்ஸ், தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகள் அந்தத் தடுப்பூசி மருந்தை மக்களுக்குச் செலுத்தும் திட்டத்தைத் தொடர்வதாக தெரிவித்துள்ளன.

டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் ஆஸ்ட்ரசெனிகா தடுப்பூசி மருந்தின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

குறிப்புச் சொற்கள்