மலேசியாவில் அன்வார் இப்ராகிம் தலைமையிலான பிேகஆர் கட்சியின் உதவித் தலைவராக இருந்த சேவியர் ஜெயக் குமார் (படம்) நேற்று அக்கட்சியிலிருந்து விலகினார். கோலா லங்காட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் சேவியர், இனி தாம் ஒரு சுயேச்சை உறுப்பினர் என்றும் தேசிய கூட்டணி (பெரிக் காத்தான் நேஷனல்) அரசாங்கத் திற்கு தமது ஆதரவு உண்டு என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். "நான் எனது தொகுதியில் தொடர்ந்து பணியாற்றுவேன். கோலா லங்காட் மக்களுக்கு நான் வழங்கிய
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்," என்றார் அவர்.
முன்னாள் கேபினட் அமைச் சரான டாக்டர் சேவியர், 1998 முதல் பிகேஆர் கட்சியில் பணியாற்றி வந்தார். அண்மைய அரசியல் நிகழ்வுகளால் தாம் மிகவும் விரக்தி அடைந்ததாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக, கிருமிப் பரவல் வேகமெடுத்த நேரத்தில் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தது பொருத்தமற்றது என்றார் அவர்.
கடந்த மாத இறுதியில்தான் ஜுலாவ், தெப்ராவ் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி பிரதமர் முகைதீன் யாசினுக்கு ஆதரவு அளிக்கப்போவதாகத் தெரிவித்தனர். மூன்று வாரங்களில் மூன்று எம்.பி.க்கள் கட்சி தாவியதன் பின்னணி மர்ம மாக உள்ளது. 2018 பொதுத் தேர்
தலில் 48 இடங்களில் வென்ற பிகேஆர் கட்சிவசம் தற்போது 35 எம்.பி.க்களே உள்ளனர்.

