அம்மான்: ஜோர்தான் நாட்டில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை ஒன்றில் பிராணவாயு விநியோகத்தில் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து குறைந்தது அறுவர் உயிரிழந்தனர்.
தலைநகர் அம்மானுக்கு மேற்கில் உள்ள அந்த அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, கொரோனா சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் பிராணவாயு விநியோகம் தடைபட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

