மியன்மாரில் தொடரும் துப்பாக்கிச்சூடு; மோசமடையும் நிலவரம்

மியன்மாரில் தொடரும் துப்பாக்கிச்சூடு; மோசமடையும் நிலவரம்

1 mins read
4f1799c5-7b8b-438d-8124-84f88144bbd6
பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

மியன்மாரில் பாதுகாப்புப் படையினர் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 38 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்றும் (மார்ச் 15) ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோர் மீது துப்பாக்கிச்சூடு தொடர்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர் ஆங் சான் சூச்சியை விடுவிக்கக் கோரி அவரது ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று மாண்டலே நகரின் வீதிகளில் திரண்டனர்.

மியன்மாரில் பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தியதைத் தொடர்ந்து நேற்று ஒரே நாளில் அங்கு இத்தனை பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருப்பது இதுவே முதன்முறை.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதற்காக அவர்களையும் சேர்த்து இதுவரை ஏறக்குறைய 140 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில், யங்கூன், மாண்டலே உள்ளிட்ட பெரிய நகர்களின் பல பகுதிகளில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரில் மோசமடைந்து வரும் நிலவரம் குறித்து கருத்துரைக்க ராணுவப் பேச்சாளர் மறுத்துவிட்டார்.

குறிப்புச் சொற்கள்