இந்தியாவை மீண்டும் மிரட்டுகிறது கொரோனா

இந்தியாவை மீண்டும் மிரட்டுகிறது கொரோனா

1 mins read
4c3ca288-c13f-4db9-921a-3194f1fa1337
இந்தியாவில் நேற்று (மார்ச் 14) புதிதாக 26,291 பேரைக் கிருமி தொற்றியுள்ளது. 118 பேர் உயிரிழந்துவிட்டனர். -

இந்தியாவில் இதுவரை சுமார் முப்பது மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சில மாநிலங்களில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிராவில் நிலைமை மோசமாக உள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (மார்ச் 14) புதிதாக 26,291 பேரைக் கிருமி தொற்றியுள்ளது. 118 பேர் உயிரிழந்துவிட்டனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் சுமார் 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நிலைமை மோசமடைந்து வருவதால், நாக்பூரில் இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்