லண்டன்: ஆஸ்ட்ரஸெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறையும் ஆபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த சில நாடுகள் தடை விதித்துள்ளன.
ஆனால் கொவிட்-19 தடுப்பூசி களைப் போட்டுக்கொண்டவர் களின் தரவுகளை ஆராய்ந்ததில் ரத்தம் உறைவதற்கான ஆதாரமில்லை என்று ஞாயிற்றுக்கிழமை அன்று ஆஸ்ட்ரஸெனகா நிறுவனம் தெரிவித்தது.
ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் 17 மில்லியன் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்ட்ரஸெனகா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அவர்களுடைய பாதுகாப்பு தொடர்பான தரவுகள் ஆராயப்பட்டன. ஆனால் ரத்தம் கட்டுவதற்கோ அல்லது உறைவதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை என்று அந்நிறு வனம் தெரிவித்தது.
ஐயர்லாந்து, டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்தில் ரத்தம் உறையும் பிரச்சினை காரணமாக ஆஸ்ட்ரஸெனகா தடுப்பூசி களைப் பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இத்தகைய நடவடிக்கை கொள்ளைநோய் பரவலைத் தடுக்க போதுமான மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் மருத்துவர் நிபுணர் பீட்டர் இங்கிலிஷ் எச்சரித்துள்ளார்.

