சூச்சி மீதான விசாரணை ஒத்திவைப்பு

சூச்சி மீதான விசாரணை ஒத்திவைப்பு

1 mins read
d088b6ed-8163-4ea0-a6bc-6ed9b7196324
ஆங் சான் சூச்சி. -

யங்­கூன்: ராணு­வத்­தின் பிடி­யில் சிக்­கி­யுள்ள மியன்­மா­ரில் முன்­னாள் அர­சாங்க ஆலோ­ச­க­ரான ஆங் சான் சூச்சி மீதான வழக்கு விசா­ரணை தொடங்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. காணொளி மூல­மாக நடை­பெ­றும் விசா­ர­ணை­யில் ஆங் சான் சூச்சி முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் மியன்­மார் முழு­வ­தும் இணை­யத் தொடர்பு பாதிக்­கப்­பட்­ட­தால் சூச்சி மீதான வழக்கு விசா­ரணை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

மார்ச் 24ஆம் தேதி வழக்கு மீண்­டும் விசா­ர­ணைக்கு வரும் என்று சூச்­சி­யின் வழக்­க­றி­ஞர் கின் மாவுங் ஸாவ் தெரி­வித்­தார்.