மலேசியாவில் கிருமித்தொற்று குறைந்தது

மலேசியாவில் கிருமித்தொற்று குறைந்தது

1 mins read
9688ea39-0f65-46f1-b0fc-262cb686fc5d
மலேசியாவில் நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக கிருமித்தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. படம்: ஏஎஃப்பி -

மலேசியாவில் நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக கிருமித்தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. புதிதாக 1,063 பேர் பாதிக்கப்பட்டதாக மலேசிய சுகாதார அமைச்சு இன்று (மார்ச் 16) தெரிவித்தது.

மலேசியாவில் ஜனவரி 30ஆம் தேதி புதிய உச்சமாக 5,728 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஜனவரி நடுப்பகுதி முதல் இம்மாதம் 4ஆம் தேதி வரை இரண்டாவது முறையாக அங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகிருமித்தொற்று