மியன்மாரில் 20 பேர் பலி

மியன்மாரில் 20 பேர் பலி

2 mins read
ce235dfd-86ca-4e66-9548-773ecc5ebc88
ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மருத்துவ மாணவரின் தாயார் கதறி அழுகிறார். அவரின் உறவினர் ஒருவர் அவரைத் தேற்றுகிறார்.படம்: இபிஏ -

யங்­கூன்: மியன்­மா­ரில் ராணு­வம் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தில் ஒரே நாளில் குறைந்­தது இரு­பது பேர் உயி­ரி­ழந்­த­னர்.

முக்­கிய நக­ரங்­களில் மக்­கள் தொடர்ந்து ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­வ­தால் திங்­கள் அன்று ராணு­வம் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­யது. இதில் குறைந்­தது இரு­பது பேர் பலி­யா­ன­தாக உள்­ளூர் கண்­கா­ணிப்­புக் குழு ஒன்று தெரி­வித்து.

ஆறு வாரங்­க­ளுக்கு முன்பு ஆங் சான் சூச்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை ராணு­வம் கவிழ்த்­தது. அர­சாங்­கத் தலை­வர்­க­ளை­யும் ராணு­வம் சிறை­யில் அடைத்து வைத்­துள்­ளது.

தேர்­த­லில் முறை­கேடு நடந்­த­தா­க­வும் ஆங் சான் சூச்சி தங்­கம் மற்­றும் ரொக்­கம் பெற்­றதாக­வும் ராணு­வம் குற்­றம்­சாட்­டி­யுள்­ளது. ஆனால் இதற்­கான ஆதா­ரங்­கள் எதை­யும் இதுவரை ராணு­வம் வெளி­யி­ட­வில்லை.

இந்த நிலை­யில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­ட­வும் ஆங் சான் சூச்­சியை விடு­விக்­க­வும் ஆயி­ரக் கணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் உண்மையான மற்றும் ரப்பர் தோட்டக்களால் சுட்டும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திங்கள் அன்று நடந்த வன்முறைகளில் இருபது பேர் மாண்டதாக அரசியல் கைதி களின் உதவிச் சங்கம் தெரிவித்தது.

"பலி எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு 180 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்," என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் அச்சங்கம் ெதரிவித்தது.

இதற்கிடையே அனைத்துலக சமூகம் வரம்பு மீறி செயல்பட வேண்டாம் என்று ராணுவத்தை வலியுறுத்தியுள்ளது. ஐநா, அமெ ரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மியன்மாரில் நடக்கும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரி வித்துள்ளன. இதுவரை குைறந்தது 138 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என ஐநா தெரி வித்தது. அமைதியாக நடந்த ஆர்ப் பாட்டத்தில் பெண்களும் குழந்தை களும் பலியாகியிருப்பதாகவும் ஐநா குறிப்பிட்டது.

ஆனால் அனைத்துலக சமூ கத்தின் வேண்டுகோளை மியன்மார் மதிப்பதாக இல்லை.