இந்தியாவிடம் தடுப்பூசி வாங்க மலேசியா திட்டம்

இந்தியாவிடம் தடுப்பூசி வாங்க மலேசியா திட்டம்

2 mins read

ஈப்போ: மலே­சியா, இந்­தி­யா­வி­ட­மி­ருந்து தடுப்­பூ­சி­களை வாங்க திட்­ட­மிட்­டுள்­ளது.

இதற்­காக இந்­திய அர­சாங்­கத்­தி­டம் பேச்சு நடத்தி வரு­வ­தாக மலே­சிய அமைச்­சர் கைரி ஜமா­லு­டீன் நேற்று தெரி­வித்­தார்.

"தடுப்­பூ­சி­களை தரு­விப்­பது குறித்து இந்­திய தூத­ர­கத்­தி­டம் பேசி வரு­கி­றோம். இந்­திய அர­சாங்­கத்­தி­டம் மட்­டு­மல்­லா­மல் தடுப்­பூ­சி­க­ளைத் தயா­ரிக்­கும் சீரம் இன்ஸ்­டி­டி­யூட் ஆஃப் இந்­தியா போன்ற நிறு­வ­னங்­க­ளு­டன் பேசி வரு­கி­றோம்," என்று தேசிய தடுப்­பூசி இயக்­கத்தை ஒருங்­கி­ணைக்­கும் அமைச்­ச­ரு­மான திரு கைரி குறிப்­பிட்­டார்.

"நோவா­வாக்ஸ் தடுப்­பூ­சி­களை விற்­பனை செய்­வ­தில் இந்­தியா விதித்­துள்ள நிபந்­த­னை­க­ளை­யும் கவ­னத்­தில் கொள்ள வேண்­டி­யி­ருக்­கிறது," என்றார் அவர். உள்­ளூர் நிறு­வ­ன­மான பாரத் பயோ­டெக் தயா­ரித்­துள்ள தடுப்­பூ­சி­களை வழங்க இந்­தியா முன்­வந்­துள்­ளது. ஆனால் இன்­ன­மும் 3வது கட்ட சோத­னையை பாரத் பயோ­டெக் தடுப்­பூ­சி­கள் தாண்­ட­வில்லை," என்று அவர் கூறினார்.

பேராக்­கில் உள்ள தடுப்­பூசி நிலை­யத்­தைச் சுற்­றிப் பார்த்த பிறகு அமைச்­சர் கைரி செய்­தி­யா­ளர்க­ளி­டம் பேசி­னார்.

மலே­சி­யா­வுக்­கும் இந்­தியா இல­வ­ச­மாக தடுப்­பூ­சி­களை வழங்­கு­கி­றதா என்று கெஅ­டி­லான் கட்­சித் தலை­வ­ரான அன்­வார் இப்­ரா­ஹிம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.

இதற்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர் கைரி, வரு­மா­னம் குறைந்த நாடாக இல்­லா­த­தால் இந்­தி­யா­வின் இல­வ­சத் தடுப்­பூ­சித் திட்­டத்­துக்கு மலே­சியா தகுதி பெற­வில்லை என்­றார்.

வரு­மா­னம் குறைந்த நாடு­ களுக்கு இந்­தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடு­கள் இல­வ­ச­மாக கொவிட்-19 தடுப்­பூ­சி­களை வழங்கி வரு­கின்­றன.

"மேல்­மட்ட நடுத்­தர வரு­மா­னம் கொண்ட நாடாக நாம் வகைப்­ படுத்­தப்­பட்­டுள்­ளோம். இத­னால் கழிவு விலை­யிலோ அல்­லது இல­வ­ச­மா­கவோ தடுப்­பூசி கிடைக்க வாய்ப்­பில்லை," என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

மலே­சி­யா­வில் 3வது கட்ட தடுப்­பூசி திட்­டம் தொடங்­கும்­போது பெரிய அளவில் தடுப்­பூசி நிலை­யங்­கள் அமைக்­கப்­படும் என்­றார்.

இவ்­வாண்டு இறு­திக்­குள் தடுப்­பூசி திட்­டம் நிறைவு­பெ­றும் என்­றும் அமைச்­சர் கைரி நம்­பிக்கை தெரி­வித்­தார்.