ஜப்பானுடன் உறவைப் பலப்படுத்த அமெரிக்கா அறைகூவல்

ஜப்பானுடன் உறவைப் பலப்படுத்த அமெரிக்கா அறைகூவல்

1 mins read
a8afd260-f737-447b-b97c-ff901a445686
ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் டோஷிமிட்சு மோடெகியைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்(இடம்). இந்தச்சந்திப்பில் அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினும் கலந்துகொண்டார். படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்­கிேயா: ஆசிய நட்பு நாடு­க­ளு­டன் சேர்ந்து சீனா­வுக்கு தடுப்பு அரணை ஏற்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் ஆசிய பய­ணம் மேற்­கொண்­டுள்ள அமெ­ரிக்காவின் இரு முக்­கிய அமைச்­சர்­கள் நேற்று தோக்­கியோ வந்து சேர்ந்­த­னர்.

ஜப்­பா­னில் காலடி பதித்­த­தும் பேசிய அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­கன், ஜப்­பா­னு­ட­னான பொரு­ளி­யல் உறவை மேலும் பலப்­ப­டுத்த விரும்­பு­வ­தா­கக் கூறி­னார்.

திரு ஆண்­டனி பிளிங்­க­னு­டன் அமெ­ரிக்க தற்­காப்பு அமைச்­சர் லாய்ட் ஆஸ்­டி­னும் தோக்­கியோ வந்­துள்­ளார். அதி­பர் ஜோ பைடன் பொறுப்பு ஏற்ற பிறகு அவ­ரது நிர்­வா­கத்­தைச் சேர்ந்த இரு முக்­கிய அமைச்­சர்­கள் ஆசி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வது இதுவே முதல் முறை. "அமெ­ரிக்­கா­வுக்­கும் ஜப்­பா­னுக்­கும் இடை­யி­லான பொரு­ளி­யல் உறவு நல்ல நிலை­யில் உள்ளது. இந்த உறவு உல­கி­லேயே மிக­வும் வலு­வா­னது," என்று தோக்­கி­யோ­வில் பின்­னர் வர்த்­தக தலை­வர்­க­ளி­டையே உரை­யாற்­றிய திரு பிளிங்­கன் குறிப்­பிட்­டார். ஜப்­பா­னிய பிர­த­மர் யோஷி­ஹிடோ சுகா, வெளி­யு­றவு அமைச்­சர் டோஷி­மிட்சு மோடெகி, தற்­காப்பு அமைச்­சர் நோபுவோ கிஷி ஆகி­யோ­ரை­யும் அமைச்­சர்­கள் சந்­தித்­த­னர்.