அம்னோ கூட்டணியை நிராகரித்த அன்வார்

அம்னோ கூட்டணியை நிராகரித்த அன்வார்

1 mins read
c3a15dcc-ab1b-425a-ae4a-963012a78d66
கோலாலம்பூர் ஹோட்டலில் செய்தியாளர் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த அன்வார் இப்ராஹிம். படம்: ஏஎஃப்பி -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான அன்­வார் இப்­ரா­ஹிம், அம்­னோ­வு­டன் கூட்­டணி அமைக்­கும் சாத்­தி­யத்தை நிரா­க­ரித்­துள்­ளார்.

கூட்­டணி பற்­றிய பேச்சு ஆரம்பக்­ கட்­டத்­தி­லேயே உள்­ளது என்று அவர் சொன்­னார்.

கோலா­லம்­பூர் ஹோட்­டல் ஒன்­றில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்த அன்­வார், மலாய் தேசிய கட்­சி­யு­ட­னான கூட்­டணி சாத்­தி­யம் குறித்து இப்­போது பேச முடி­யாது என்­றார்.

"அடுத்த பொதுத்­தேர்­த­லுக்­கான கூட்­டணி வாய்ப்­பு­கள் ஆரம்­பக் கட்­டத்­தி­லேயே இருக்­கிறது என்று ஏற்­கெ­னவே கூறி­யி­ருக்­கி­றேன். ஆலோ­சனை மட்­டுமே நடத்­தி­யுள்­ளோம்," என்று அன்­வார் குறிப்­பிட்­டார்.

அண்­மை­யில் அன்­வார் இப்­ரா­ஹி­மின் கெஅ­டி­லான் கட்­சி­யி­லி­ருந்து மூன்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வெளி­யே­றி­னர்.

அப்­போ­தும் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­குத் தேவை­யான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆத­ரவு தமக்கு இருப்­ப­தாக அன்­வார் மீண்டும் நேற்று கூறி­யுள்­ளார்.