ஜெனீவா: அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை நிறுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் நேற்று கேட்டுக்கொண்டது.
அந்தத் தடுப்பூசி பக்க விளைவுகள் ஏற்படுத்துவதாகக் கூறி ஐயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளதால் உலக அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
ஆனால் பக்க விளைவுகள் ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்ட ஆதாரம் எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.
அஸ்ட்ராஸெனகா நிறுவனமும் உலக நாடுகளில் 17 மில்லியன் மக்களுக்குப் போடப்பட்டுள்ள தடுப்பூசிகளில் இதுவரை பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்தது.
இதற்கிடையே ஜெர்மனி, இத்தாலி, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளும் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிக்கு இடைக்காலத் தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டபடி அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி மக்களுக்கு போடப்படும் என்று கூறியுள்ளது. இந்தோனீசியா காத்திருக்கப் போவதாக தெரிவித்தது.

