ஆங் சான் சூச்சி மீது ஊழல் குற்றச்சாட்டு

யங்கூன்: மியன்மார் ராணுவம் தான் பிப்ரவரி 1ஆம் தேதி நிகழ்த்திய ஆட்சிக் கவிழ்ப்பை நியாயப்படுத்தும் விதமாக ஆங் சான் சூச்சி மீது மேலும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இதன் மூலம் ஆட்சியிலிருந்து கீழிறக்கப்பட்ட ஆங் சான் சூச்சியை நீண்டகாலம் சிறையில் வைத்திருக்க அது எண்ணம் கொண்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான சட்டம் ஒன்றின்கீழ் சூச்சி அம்மையார் மீது ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி, சே பெய்ங் கன்ஸ்டிரக்‌ஷன் என்ற நிறுவனத்தின் தலைவரிட மிருந்து சூச்சி அம்மையார் அமெரிக்க டாலர் 737,000ஐ நான்கு தவணைகளாக 2018ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு ஏப்ரல் வரை பெற்றார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் அந்தக் கட்டுமான நிறுவனத் தலைவரின் வாக்குமூலம் அடங்கிய தாகக் கூறப்படும் காணொளி ஒன்றையும் ராணுவம் வெளி யிட்டுள்ளது. சூச்சி அம்மையாருக்கு பணம் கொடுத்ததை நேரில் பார்த்த சாட்சிகள் எவரும் இல்லை என்றும் கட்டுமான நிறுவனத் தலைவர் கூறுவதாக புளூம்பெர்க் செய்தித் தகவல் தெரிவிக்கிறது. சூச்சி அம்மையார் தமது சட்ட ஆலோசகர்களை சந்திக்கவும் ராணுவம் தடை விதித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!