கொள்ளை நோயால் முதியோர் பாதிப்படைவது அதிகரிப்பு

கொள்ளை நோயால் முதியோர் பாதிப்படைவது அதிகரிப்பு

2 mins read

கொவிட்19 கொள்­ளை­நோய் ஏற்­ப­டுத்­திய பாதிப்பு பற்றி ஐநா

ஜெனிவா: முதி­யோரை ஒரே கண்­ணோட்­டத்­தில் பார்ப்­பது, அவர்­க­ளுக்கு எதி­ராக பார­பட்­ச­மான முறை­யில் நடந்­து­கொள்­வது உல­கெங்­கி­லும் உள்ள பொது­வான நிலைமை.

எனி­னும், இந்­தப் போக்கு கொரோனா கொள்­ளை­நோய் காலத்­தில் மிக­வும் மோச­மா­கி­யுள்­ள­தாக ஐக்­கிய நாடு­கள் சபை கூறி

யுள்­ளது.

கொரோனா கொள்­ளை­நோய் ஏற்­ப­டுத்­தி­யுள்ள நெருக்­கடி முதி­யோ­ரி­டம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­றும் உல­கம் இதி­லி­ருந்து மீண்டு வர பல தலை­முை­ற­யி­ன­ரி­டையே ஒருங்­கிை­ணந்த செயல்­பாடு அவ­சி­யம் என்­றும் ஐநா தலை­மைச் செய­லா­ளர் அண்­டோ­னியோ குட்­ட­ரஸ் கூறி­யுள்­ளார்.

முதி­யோ­ருக்கு எதி­ரான பார­பட்­ச­மான போக்கு சமு­தா­யத்­தில் பர­விக் கிடப்­ப­தா­க­வும் அது அவர்­களை மட்­டுமே பாதிக்­கக்­கூ­டி­யது அல்ல என்றும் நான்கு ஐநா அமைப்­பு­கள் வெளி­யிட்­டுள்ள கூட்­ட­றிக்கை தெரி­விக்­கிறது.

இதில் குறிப்­பாக, வேலை­யி­டங்­களில் இளை­யர், முதி­யோர் என இரு பிரி­வி­ன­ரும் பாத­க­மான சூழலை எதிர்­கொள்­ளும் அபாயம் உள்­ள­தாக அந்த அறிக்கை விளக்­கி­யது.

இந்­தப் பிரச்­சினை சுகா­தா­ரம், சமூ­கப் பரா­ம­ரிப்பு, ஊடக, சட்ட நடை­மு­றை­கள் போன்­ற­வற்­றி­லும் நில­வு­வ­தாக அறிக்கை சுட்­டி­யது.

"முதி­யோ­ருக்கு எதி­ரான பார­பட்­ச­மான போக்கு என்­பது அனைத்து அமைப்­பு­க­ள், சட்­டம், நாட்­டின் கொள்ைககள் என உல­கம் முழு­வ­தும் பர­வ­லா­கக் காணப்­

ப­டு­கிறது," என்று அந்த அறிக்­கை­யில் குறிப்­பிட்ட திரு குட்­ட­ரஸ், "இவை அவர்­க­ளுக்கு மனித உரி­மை­களை மறுப்­ப­து­டன் அவர்­கள் தங்­க­ளின் முழு ஆற்­றலை அடைய முடி­யாத நிலை­யை­யும் ஏற்­ப­டுத்­து­கின்றன," என்­றார்.

உலக சுகா­தார அமைப்பு, ஐநா மனித உரிமை அலு­வ­ல­கம், ஐநா பொரு­ளி­யல், சமூக விவ­கார அமைப்பு, ஐநா மக்­கள்­தொகை நிதி­யம் ஆகிய அமைப்­பு­கள் ஒன்­றி­ணைந்து இந்த 203 பக்க அறிக்­கையை தயார் செய்­துள்­ளது.

அதில் முதி­யோ­ருக்கு எதி­ரான பார­பட்­ச­மான போக்கு, அவர்­களை ஒரு குறிப்­பிட்ட கண்­ணோட்­டத்­தில் காண்­பது, அவர்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மனப்­போக்­கு­கள் ஆகி­ய­வற்­று­டன் வெளிப்­ப­டை­யாக அவர்­களை ஒதுக்­கு­வது எனப் பல வழி­களில் வெளிப்­ப­ட­லாம் என்று கூறு­கிறது.

கொரோனா கொள்­ளை­நோய் பர­வு­வ­தற்கு முன்­னரே இது ஒரு ெபரிய பிரச்­சி­னை­யாக இருந்­துள்­ளது என்­றும் கொள்­ளை­நோய் இந்­தப் பிரச்­சி­னையை பெரி­தாக்­கி­யுள்­ள­தாக உலக சுகா­தார அமைப்­பின் தலை­வர் டெட்­ரோ­ஸும் மற்ற மூன்று அமைப்­பு­க­ளின் தலை­வர்­களும் அந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­துள்­ள­னர்.