ஆங் சான் சூச்சி மீது ஊழல் குற்றச்சாட்டு

ஆங் சான் சூச்சி மீது ஊழல் குற்றச்சாட்டு

1 mins read
d2c44c97-faa0-48e0-80ba-d59360e1e5fb
மியன்மாரில் ஆர்ப்பாட்டக் காரர்கள் ராணுவம் தலைநகர் யங்கூனில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தலையில் காயம் அடைந்த பே தியன் கியவ் என்பவருக்கு உதவி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.படம்: ராய்ட்டர்ஸ் -

யங்கூன்: மியன்மார் ராணுவம் தான் பிப்ரவரி 1ஆம் தேதி நிகழ்த்திய ஆட்சிக் கவிழ்ப்பை நியாயப்படுத்தும் விதமாக ஆங் சான் சூச்சி மீது மேலும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இதன் மூலம் ஆட்சியிலிருந்து கீழிறக்கப்பட்ட ஆங் சான் சூச்சியை நீண்டகாலம் சிறையில் வைத்திருக்க அது எண்ணம் கொண்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான சட்டம் ஒன்றின்கீழ் சூச்சி அம்மையார் மீது ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி, சே பெய்ங் கன்ஸ்டிரக்‌ஷன் என்ற நிறுவனத்தின் தலைவரிட மிருந்து சூச்சி அம்மையார் அமெரிக்க டாலர் 737,000ஐ நான்கு தவணைகளாக 2018ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு ஏப்ரல் வரை பெற்றார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் தொடர் பில் அந்தக் கட்டுமான நிறுவனத் தலைவரின் வாக்குமூலம் அடங்கிய தாகக் கூறப்படும் காணொளி ஒன்றையும் ராணுவம் வெளி யிட்டுள்ளது. சூச்சி அம்மையாருக்கு பணம் கொடுத்ததை நேரில் பார்த்த சாட்சிகள் எவரும் இல்லை என்றும் கட்டுமான நிறுவனத் தலைவர் கூறுவதாக புளூம்பெர்க் செய்தித் தகவல் தெரிவிக்கிறது. சூச்சி அம்மையார் தமது சட்ட ஆலோசகர்களை சந்திக்கவும் ராணுவம் தடை விதித்துள்ளது.