கொவிட்-19 கொள்ளைநோய்க்கு எதிரான சுகாதார கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதத்தை உயர்த்தும் திட்டத்துக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை வெளியிட்டதால் அதிலிருந்து மலேசிய அரசு பின்வாங்கியுள்ளது.
விதிகளை மீறும் தனிநபர்களுக்கு எதிரான அபராதத்தை ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து 10,000 ரிங்கிட்டாகவும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 50,000 ரிங்கிட்டாகவும் உயர்த்தும் திட்டம் இம்மாதம் 11ஆம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவை மிகவும் அதிகம் என்றும் இதற்கு எவ்வித நியாயமுமில்லை என்றும் பரவலாக குறைகூறல்கள் எழுந்தன. அத்துடன், விதிகளில் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டதும் அவை தொடர்பில் ஒரு தெளி வின்மை நிலவியதும் ெபாதுமக்க ளின் கோபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

