செய்-திக்-கொத்து

செய்-திக்-கொத்து

2 mins read

தைவான் பயணம்: சீனாவின் எதிர்ப்புக்கு பிரான்ஸ் பதிலடி

பாரிஸ்: தைவானுக்குச் செல்லும் பிரான்ஸ் நாட்டு செனட்டர்கள் அங்கு அந்நாட்டு அதிகாரிகளைச் சந்திப்பதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த பிரான்ஸ் தமது நாட்டு செனட்டர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது அவர்கள் தங்கள் விருப்பப்படி மற்றவர்களை சந்தித்துப் பேசலாம் என்று கூறியுள்ளது.

இவ்வாண்டு கோடை காலப் பருவத்தில் பிரான்ஸ் நாட்டு தைவான் நட்புறவு அமைப்பைச் சார்ந்த செனட்டர்கள் தைவானுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சீன அரசின் தூதர் சீன-பிரஞ்சு உறவுகளை பாதிக்கும் வகையில் தைவானிய அதிகாரிகளுடன் பிரான்ஸ் நாட்டு செனட்டர்கள் சந்திப்பு நிகழக்கூடாது என்றும் அவ்வாறு சந்திப்பது ஒரே சீனா என்ற கொள்கைக்கு மாறுபட்டது என்றும் கூறினார்.

சீனாவின் இந்த எதிர்ப்பு வாசகம் அடங்கிய கடிதம் பிரஞ்சு ஊடகங்களுக்கும் தைவான் நட்புறவு அமைப்பின் தலைவர் திரு அலெய்ன் ரிச்சர்ட் என்பவருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

இதைக் கண்டு திரு அலெய்ன் கொதிப்படைந்த நிலையில், பிரஞ்சு வெளியுறவு அமைச்சு தனது நாட்டில் உள்ள அரசியல் அமைப்புகள் தனித்தனி அதிகாரங்கள் கொண்டவை என்றும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளது.

ராணுவ ஒடுக்குமுறையால் தனிமைப்படுத்தப்படும் மியன்மார்

யங்கூன்: மியன்மாரில் நாட்கள் செல்லச் செல்ல அந்நாட்டில் இணையச் சேவை குறைந்து வருவதாலும் அங்குள்ள ஒேர தனியார் செய்தித்தாள் அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாலும் அந்நாடு தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

உலக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி அம்மையாரின் ஆட்சி பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி கவிழ்க்கப்பட்ட பின் அங்கு பெருமளவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

இதைக் கட்டுக்குள் ெகாண்டுவர ராணுவம் திணறி வருகிறது. அதற்காக அது மிகுந்த வன்முறை கலந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுவரை கிட்டத்தட்ட 217 பேர் இந்த ஆர்ப்பாட்டங்களில் மாண்டுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், மேற்கத்திய நாடுகள் பெரும்பாலும் ஆட்சிக்கவிழ்ப்பைக் கண்டித்துள்ளன.

அத்துடன், சூச்சி அம்மையாரையும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களையும் விடுவிக்க அவை வலியுறுத்தி வருகின்றன.

மியன்மாரில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட பொருளியல் தற்பொழுது இந்த ஆர்ப்பாட்டங்களால் மேலும் பாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.

இந்நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அந்நாட்டில் முதலீடு செய்வது குறித்து மறு சிந்தனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா: முதல் முறையாக மக்கள்தொகை குைறந்துள்ளது

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக மக்கள்தொகை குறைந்துள்ளது. கொரோனா கிருமித்தொற்று சூழலில் ஆஸ்திரேலியாவில் குடியேறும் வெளிநாட்டினர் வருகை நின்றுவிட்டதாக நேற்று அந்நாடு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஆஸ்திரேலியாவில் கடந்த காலாண்டின் கணக்குப்படி, அந்நாட்டின் மக்கள்தொகை குைறந்துள்ளதாகக் கூறும் புள்ளிவிவரத் துறை, அங்கு கடைசியாக மக்கள்தொகை குைறந்தது டிசம்பர் 1916ஆம் ஆண்டு என்று விளக்கியது.