விமானத்தில் ஏறியபோது அதன் படிக்கட்டுகளில் தடுக்கி விழுந்த அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் நேற்று ஏறியபோது அதன் படிக்கட்டுகளில் தடுக்கி விழுந்து மீண்டெழும் காட்சிகளைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. விமானம் மூலம் மேரிலாந்திலிருந்து புறப்பட்டு அட்லாண்டா நகருக்கு அவர் செல்லவிருந்தார்

அந்த விமானத்தின் படிக்கட்டுகளில் அவர் பாதி தூரம் ஏறிவிட்ட நிலையில் அவர் தடுக்கி விழப் பார்த்தார். தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறிய அவர் அதில் தடுக்கி விழுந்து உடனடியாக எழுந்துவிட்டார். இறுதியாக படிக்கட்டுகளில் ஏறி முடித்த அவர், கீழே நின்றிருந்த அதிகாரிகளிடம் கையசைத்துவிட்டு உடனடியாக விமானத்திற்குள் நுழைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெள்ளை மாளிகை பேச்சாளர், திரு பைடன் “100% நலமாக” இருப்பதாகச் சொன்னார்.

“காணொளியைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும், வெளியே பலத்த காற்று வீசியதென்று. விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறியபோது நானே சற்று நேரம் நிலைதடுமாறினேன்,” என்றார் அப்பேச்சாளர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!