அனல் வீசிய வார்த்தைப் போர்

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் நடை­பெற்ற முதல் சந்­திப்பு முடி­வு­பெற்­றுள்­ளது. இரு­த­ரப்­பி­லும் கருத்து வேறு­பா­டு­கள் எழுந்­ததை அவ்­விரு நாடு­களும் ஒப்­புக்­கொண்­டுள்­ளன.

இருப்­பி­னும், பொது­நல விவ­கா­ரங்­களில் ஒத்­து­ழைப்பு ஏற்­படும் என்று அவை நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளன.

பல­த­ரப்­பட்ட விவ­கா­ரங்­களை நேர­டி­யாக அமர்ந்து விவா­திப்­பது கடி­ன­மாக இருக்­கும் என்று நாங்­கள் எதிர்­பார்த்­த­தைப் போலவே நிலைமை அமைந்­து­விட்­டது என்று அமெ­ரிக்­கா­வின் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் ஜேக் சல்­லி­வன் தெரி­வித்­தார்.

சீனா தரப்­பில் பேச்­சு­வார்த்­தை­யில் பங்­கேற்க வந்த பேரா­ளர்­கள் ஹோட்­ட­லின் கூட்ட அரங்­கை­விட்டு வெளி­யே­றிய பின்­னர் அவர் செய்­தி­யாளர்­க­ளி­டம் விவ­ரங்­களை விளக் ­கி­னார்.

அப்­போது அவ­ரு­டன் அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிலிங்­க­னும் இருந்­தார்.

ஹாங்­காங், மேற்கு சீனா­வின் ஸின்­ஜி­யாங் வட்­டா­ரம், திபெத்­தின் மனித உரிமை விவ­கா­ரம், தைவான் ஆகி­யவை மீதான சீனா­வின் செயல்­பா­டு­கள், இணை­யத் தாக்­கு­தல்­கள் போன்­றவை தொடர்­பில் விவா­தித்­த­போது இரு­த­ரப்­பி­லும் கருத்து வேற்­றுமை எழுந்­த­தாக திரு சல்­லி­வன் கூறி­னார்.

அமெ­ரிக்க அதி­ப­ராக ஜோ பைடன் பொறுப்­பேற்­றுக்கொண்ட பின்­னர் முதன்­மு­றை­யாக இரு நாடு­க­ளின் பிர­தி­நி­தி­களும் நேருக்கு நேர் பங்­கேற்­கும் இரு­நாள் சந்­திப்பு அலாஸ்­கா­வின் ஆங்­க­ரேஜ் நக­ரில் வெள்­ளிக்­கி­ழமை பிற்­ப­கல் முடி­வுற்­றது. இறு­தி­யில் நடை­பெற்ற பொதுச் சந்­திப்­பின்­போது இரு

­த­ரப்­பி­லும் கார­சார விவா­தங்­களும் முரண்­பா­டு­களும் எழுந்­தன. இது வழக்­கத்­திற்கு மாறான நிகழ்­வா­கக் கரு­தப்­பட்­டது.

சீன தரப்­பி­னர் தங்­களை பெரிய ஆளா­கக் காட்­டிக்­கொள்­கி­றார்­கள் என அமெ­ரிக்­கத் தரப்­பில் முன்­வைக்­கப்­பட்ட கருத்­துக்கு சீனா கடு­மை­யா­கப் பதி­ல­ளித்­தது.

ஒட்­டு­மொத்த அமெ­ரிக்­கர்­களும் செய்த தவற்­றால் வெடி­ம­ருந்­தின் வாச­னை­யும் வெற்று நாட­க­முமே மிஞ்சி இருப்­ப­தாக சீனத் தரப்­பி­னர் அமெரிக்கா மீது அனல் வார்த்தைகளை வீசினர்.

இருதரப்பும் விட்டுக்கொடுக்காத நிலையில் அமெரிக்க-சீன சந்திப்பு முடிவுற்றது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!