உலகளவில் ஐரோப்பிய மக்களிடமே அதிக மகிழ்ச்சி

உலகளவில் ஐரோப்பிய மக்களிடமே அதிக மகிழ்ச்சி

1 mins read

ஹெல்­சிங்கி: உல­கில் ஆக மகிழ்ச்­சி­யான நிலை­யி­லுள்ள நாடு­க­ளின் பட்­டி­ய­லில் மீண்­டும் ஐரோப்­பிய நாடு­களே முதன்மை இடங்­க­ளைப் பிடித்­துள்­ளன. உலக மகிழ்ச்சி நில­வர அறிக்­கை­யில் வெளி­யாகி இருக்­கும் பட்­டி­ய­லில் பின்­லாந்து முத­லி­டத்­தைப் பிடித்­துள்­ளது.

அதற்கு அடுத்த நிலை­யில் டென்­மார்க்­கும் அத­னைத் தொடர்ந்து அடுத்­த­டுத்த இடங்­களை சுவிட்­சர்­லாந்து, ஐஸ்­லாந்து, நெதர்­லாந்து ஆகி­ய­ன­வும் பிடித்­துள்­ளன. 149 நாடு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வில் பொரு­ளி­யல் நில­வ­ரம், சமூக ஆத­ரவு, தனி­ந­பர் சுதந்­தி­ரம், லஞ்ச ஊழல் நில­வ­ரம் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் மகிழ்ச்­சிக் குறி­யீடு கணிக்­கப்­ப­டு­கிறது.

ஐநா மன்­றத்­தின் ஆத­ர­வு­டன் இந்த ஆய்வு ஒன்­ப­தா­வது ஆண்­டாக நடத்­தப்­பட்­டது. கொவிட்-19 நில­வ­ரம் பட்­டி­ய­லில் சிறிய திருத்­தங்­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.