தூதரக நெரிசலைக் குறைக்க கூடுதல் மலேசிய அதிகாரிகள்

தூதரக நெரிசலைக் குறைக்க கூடுதல் மலேசிய அதிகாரிகள்

1 mins read

கோலாலம்பூர்: சிங்­கப்­பூ­ரிலுள்ள மலே­சியத் தூத­ர­க நெரி­ச­லுக்குத் தீர்வு காணப்­படும் என்று மலே­சிய குடி­நு­ழை­வுத் துறை நேற்று தெரி­வித்­தது. அரச மலே­சிய சுங்­கத் துறை­யு­டன் இணைந்து எட்டு அதி­கா­ரி­கள் தூத­ர­கத்­திற்கு அனுப்பப் ­ப­டு­வார்­கள் என்று குடி­நு­ழை­வுத் துறை தலைமை இயக்­கு­நர் கைருல் ஸைமீ தாவுத் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார். பாஸ்­போர்ட் வழங்­கும் நடை­மு­றை­களை வேகப்­

ப­டுத்த இது­போன்ற புதிய நட­வ­டிக்­கை­கள் வரும் வாரத்­தில் தொடங்­கும் என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

"தற்­போது தூத­ர­கத்­தில் ஐந்து அதி­கா­ரி­கள் உள்­ள­னர். அவர்­

க­ளுக்கு உதவ மேலும் எட்டு அதி­கா­ரி­கள் அங்கு அனுப்­பப்­ப­டு­வார்­கள். நெரி­ச­லைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன," என்­றார் அவர்.

பாஸ்­போர்ட் அச்­சி­டும் இயந்­தி­ரம் ஒன்று சேத­முற்­ற­தும் சில தொழில்­நுட்­பக் கோளா­று­களும் நெரி­சல் அதி­க­ரிக்க முக்­கிய கார­ணங்­கள் என திரு கைருல் ஸைமீ குறிப்­பிட்­டார்.

மேலும், இணை­யம் மூலம் முன்

­ப­திவு செய்யாமல் பாஸ்­போர்ட் தொடர்­பான விண்­ணப்­பங்­க­ளு­டன் நேரில் வரு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தும் தூத­ர­கம் முன்­பு வரிசை நீண்டதற்குக் காரணம் என வும் அவர் கூறி­னார்.