சிகாகோ: ஆஸ்ட்ராஸெனகா கொவிட்-19 தடுப்பூசி போட்ட சில நாள்களுக்கு அல்லது வாரங்களுக்குப் பிறகு மூளையில் அரிய வகை ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக குறைந்தது 18 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதையடுத்து, அதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். சிலரிடத்தில் அதிகளவு நோயெதிர்ப்புப் பொருளை அந்தத் தடுப்பூசி தூண்டிவிடுவதாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரத்தம் உறைதலுக்கும் கருத்தடை மாத்திரைகளுக்கும் தொடர்புள்ளதா என்றும் ஆராயப்பட்டு வருகிறது. ஆயினும், அதற்கு இன்னும் உறுதியான சான்று கிடைக்கவில்லை என்பது விஞ்ஞானிகள் பலரது கருத்து.
அதே வேளையில், மற்ற தடுப்பூசிகள் போட்டுக்கொண்டோரிடம் இத்தகையதொரு புகார் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டோரில் அதிகமானோர் பெண்கள் என்றும் பெரும்பாலான சம்பவங்கள் ஐரோப்பாவில் பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்ட்ராஸெனகா தடுப்
பூசியை அவசரகாலத்தில் பயன்
படுத்த 70 நாடுகள் அனுமதித்துள்ளன. ஆனாலும், அமெரிக்கா இன்னும் அந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கவில்லை.

