கிழக்கு ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டு காணா வெள்ளம்

கிழக்கு ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டு காணா வெள்ளம்

2 mins read

சிட்னி நகர் பகுதிகளில் இருந்து வெளியேறிவிடும்படி மேலும் பலருக்கு உத்தரவு

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் கிழக்கு கட­லோ­ர மாவட்டத்தில் 50 ஆண்டு­கள் இல்­லாத அள­வுக்­குப் பேய்­மழை பெய்­வதால் பெரும் வெள்­ளம் ஏற்­பட்­டு­விட்­ட­தாக நேற்று அதி­காரி­கள் தெரி­வித்­த­னர்.

நூற்­றுக்­க­ணக்­கான வீடு­கள் சேத­ம­டைந்­து­விட்­டன. ஆயி­ரக்­கணக்­கான மக்­கள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

நியூ சவுத் வேல்ஸ் மாநி­லம் முழு­வ­துமே தொடர்மழை பெய்து வரு­வ­தாக அந்த மாநில முதல்­வர் லாடிஸ் கூறி­னார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தான் ஆக அதிக மக்­கள் வசிக்­கி­றார்­கள். சிட்னி நக­ரின் வட­மேற்குத் தாழ்­வுப் பகு­தி­களில் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட மோச­மான வெள்­ளம் ஏற்­பட்­டு­விட்­டது. அது 50 ஆண்டு காலத்­தில் இல்­லாத அள­வுக்கு இருக்­கிறது என்று அவர் மேலும் கூறி­னார்.

சிட்னி நக­ரின் சில பகு­தி­களைப் பார்க்­கை­யில் 100 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்­குகூட நில­வரம் மோச­மாக இருக்­கிறது என்­றும் முதல்­வர் லாடிஸ் தெரி­வித்­தார்.

பல்­வேறு முக்­கிய சாலை­களும் மூடப்­பட்­டு­விட்­டன. அந்த மாநி­லத்­தில் பல பள்­ளிக்­கூ­டங்­களும் நேற்று வகுப்­பு­களை நிறுத்­தின.

இத­னி­டையே, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­குத் தேவை­யான நிதி­ உதவி வழங்­கப்­படும் என்று ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்கூட் மோரி­சன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் அறி­வித்­தார்.

அந்த மாநி­லத்­தின் 13 பகு­தி­களில் வெள்ள ஆபத்து குறித்­தும் மக்­கள் வெளி­யே­றி­விட வேண்­டிய அவ­சி­யம் குறித்­தும் எச்­ச­ரிக்­கப்­பட்டு உள்­ளது. பல அணைக்­கட்டு­களும் நிரம்பி வழி­கின்­றன.

இந்­நி­லை­யில், மழை இன்­னும் பல நாட்­க­ளுக்­குத் தொட­ரும் என்று வானிலை ஆய்வு நிலை­யம் அறி­வித்­துள்­ளது.

வியா­ழக்­கி­ழமை மழை தொடங்கி­யது முதல் ஏறத்­தாழ 6,000 அவ­சர அழைப்­பு­க­ளின் பேரில் செயல்­பட்டு அவ­ச­ர­கால ஊழி­யர்­கள் மக்­க­ளுக்கு உதவி இருக்­கி­றார்­கள்.

மீட்பு நிலை­யங்­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான மக்­கள் குழுமி இருக்­கி­றார்­கள். சிலர் அனைத்­தை­யும் இழந்­து­விட்­ட­தாக கிளப் டாரி என்ற நக­ரின் தலைமை நிர்­வாகி பால் ஆலன் தொலைக்­காட்­சி­யில் தெரி­வித்­தார்.

இவ்­வே­ளை­யில், பேய்­மழை கார­ண­மாக நியூ சவுத் வேல்ஸ் மாநி­லம் முழு­வ­துமே கொவிட்-19 தடுப்­பூசி திட்­டம் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் கூறினர். அந்த மாநி­லம் முழு­வ­தும் சரக்கு போக்­கு­வ­ரத்தும் பாதிக்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

உட­ன­டி­யாக வேறு பாது­காப்­பான இடத்­துக்குச் சென்­று­வி­டும்­படி சிட்னி நக­ரின் பல பகு­தி­களில் வசிக்­கும் மக்­க­ளுக்­கும் உத்­த­ர­விடப்­பட்டு இருக்­கிறது.

சிட்­னி­யில் 12 மணி நேரத்­தில் 100 மி.மீ. மழை பெய்­யும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்டு இருக்­கிறது. புளு மவுண்­டென்ஸ் பகு­தி­யில் 300 மி.மீ. வரை மழை பெய்­யக் கூடும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்டு இருக்­கிறது.

மழை­யும் கடு­மை­யான காற்­றும் அடுத்த வாரம் பிற்­ப­குதி வரை நீடிக்­கும் என்­றும் வியா­ழக்­கி­ழமை வரை வெள்­ளம் வடி­வ­தற்­கான வாய்ப்பு இல்லை என்­றும் முன்­னுரைக்­கப்­பட்டு உள்­ளது.