'தடுப்பூசியால் மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டால் 50,000 ரிங்கிட் இழப்பீடு'

'தடுப்பூசியால் மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டால் 50,000 ரிங்கிட் இழப்பீடு'

1 mins read
9a1c5277-01cc-4605-bd7b-eb8f6da9149d
-

கோலா­லம்­பூர்: தடுப்­பூ­சி­யால் மோச­மான பக்க விளை­வு­கள் ஏற்­பட்­டால் 50,000 ரிங்­கிட் இழப்­பீடு வழங்­கப்­படும் என்று மலே­சியா அறி­வித்­துள்­ளது.

இழப்­பீடு தலா ஒரு­வ­ருக்கு 500,000 ரிங்­கிட் என வரம்பு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளதாக நேற்று சுகா­தார அமைச்­சர் டாக்­டர் ஆடம் பாபா தெரி­வித்­தார்.

தேசிய பேரி­டர் நிர்­வா­கம் இழப்­பீட்டை வழங்­கும் என்­று அவர் குறிப்­பிட்­டார்.

அர­சாங்­கம் ஆரம்­பக்­கட்ட நிதி­யாக பத்து மில்­லி­யன் ரிங்­கிட் ஒதுக்­கி­யுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார். பக்கவிளைவு காரணமாக மருத்துமனையில் நீண்டகாலம் தங்க நேரிட்டால் அவர்களுக்கு 50,000 ரிங்கிட் உதவி தொகை வழங்கப்படும். பக்க விளைவால் நிரந்தர இயலாமை அல்லது மரணம் ஏற்பட்டால் 500,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் ஆடம் பாபா அறிவித்தார்.

இதற்­கி­டையே குைறந்­தது 1.5 மில்­லி­யன் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு கொவிட் சோதனை நடத்­தப்­பட்­டுள்­ள­தாக மலே­சிய மனி­த­வள அமைச்­சர் தெரி­வித்­தார்.

மார்ச் 31ஆம் தேதிக்­குள் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான சோத­னை­களை நடத்தி முடிக்க வேண்­டும் என்று இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் நான்கு முக்­கிய பொரு­ளி­யல் வட்­டா­ரங்­களில் உள்ள ஊழி­யர்­க­ளுக்கு சோதனை முடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்­சர் சர­வ­ணன் கூறினார். தயா­ரிப்­புத் துறை, கட்­டு­மா­னத் துறை, வேளாண் துறை­யைச் சேர்ந்­த­வர்­களுக்குத் கொவிட் பரிசோதனையில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.