செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
1298a2c9-f403-4b52-9eca-b43ae624cd63
-

மீண்டும் அஸ்ட்ராஸெனகா

ஜகார்த்தா: இந்தோனீசியா, அஸ்ட்ராஸெனகா

தடுப்பூசிகளைப் போடும் பணியைத் தொடங்கியுள்ளது. சுற்றுலாவுக்குப் பிரபலமான பாலியிலிருந்து தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியால் ரத்தம் உறைந்து போவதாக தகவல் வெளி யானதால் அந்தத் தடுப்பூசியைப் போடும் நடவடிக்கையை இந்தோனீசியா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.

போர் விமானங்கள் மோதல்

தைப்பே: தைவானின் இரு போர் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது என்று தைவான் அதிகாரிகள் தெரிவித்தனர். இது, இவ்வாண்டின் முதல் பாதியில் நிகழ்ந்துள்ள 3வது சம்பவமாகும். சீனா அடிக்கடி கப்பல்களை அனுப்பி மிரட்டுவதால் நெருக்குதல் காரணமாக தைவான் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

எட்டுப் பேரை ஒப்படைத்த சீனா

பெய்ஜிங்: ஹாங்காங்கிலிருந்து அதிவேக படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சி செய்து பிடிபட்ட ஜனநாயக ஆதரவாளர் குழுவைச் சேர்ந்த எட்டுப் பேரை ஹாங்காங்கிடம் சீனா ஒப்படைத்துள்ளது. எட்டுப் பேரும் சீனாவில் சிறைத் தண்டனையை முடித்தவர்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் தப்பிச் சென்ற 'த ஹாங்காங் 12' என்ற குழுவினரை தைவான் அருகே சீனக் கடலோரக் காவல் படையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.