ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம்

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம்

2 mins read
ca26bd9d-459b-4e22-bfbd-712683154057
சிட்னியின் வடமேற்கே உள்ள விண்ட்சர் பாலம் பாதிமூழ்கி இருப்பதை பலர் அதிர்ச்சியுடன் பார்க் கின்றனர். படம்: இபிஏ -

இரண்டு மில்லியன் பேர் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் கிழக்கு கட­லோ­ரப் பகு­தி­களில் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­வ­தால் வெள்­ளத்­தில் தத்­த­ளிக்­கும் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தி­லி­ருந்து 18,000க்கும் மேற்­பட்­டோர் பாது­காப்­பான இடத்­துக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த சில நாட்­க­ளாக விடா­மல் மழை பெய்து வரு­கிறது. இத­னால் மாநி­லத் தலை­ந­க­ரான சிட்­னி­யைச் சுற்­றி­யும் தென்­கி­ழக்கு குவீன்ஸ்­லாந்தைச் சுற்­றி­யும் உள்ள ஆறு­கள், அணைக்­கட்­டு­கள் நிரம்பி வழி­கின்­றன.

கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் சில இடங்­களில் 25 செ.மீட்­டர் வரை மழை பெய்­துள்­ளது.

நூறு ஆண்­டு­கள் காணாத மழை கடந்த சில வாரங்­க­ளாக பெய்து வரு­வ­தால் மக்­கள் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்­கும்­படி அதி­கா­ரி­கள் கேட்­டுக்கொண்­ட­னர்.

இதற்­கி­டையே மழை, வெள்­ளம் கார­ண­மாக பாது­காப்­பான இடங்­க­ளுக்கு மாற்­றப்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்குத் தேவை­யான உதவி வழங்­கப்­படும் என்று பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் அறி­வித்­துள்­ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்­வர் கிளெடிஸ் பெரெ­ஜிக்­லி­யன், இது­வரை உயிர்ச்­சே­தம் ஏற்­ப­ட­வில்லை என்று கூறி­யுள்­ளார்.

ஆனால் ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு பங்கினர் வசிக்கும் இடங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு எட்டு மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏற்ெகனவே கொள்ளைநோய் பரவலில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியாவுக்கு கனமழை மேலும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சுமார் 200 பள்ளிகள் மூடப்பட்டன. நேற்று வெள்ளம் சற்று வடிந்ததால் ஒரு சிலர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அடுத்து வரும் நாட்களில் பருவநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை நிபுணர்கள் எச்சரித்து உள்ள னர்.