உலகின் மிக முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஒன்றான சுவெஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து இன்று தடைப்பட்டது.
சரக்குக் கப்பல் ஒன்று தரைதட்டி கால்வாயின் குறுக்கே நின்றுகொண்டிருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த 400 மீட்டர் நீளமுள்ள கப்பலால் அங்கிருந்து வெளியாக முடியாததால் அதற்குப் பின்னால் வந்துகொண்டிருந்த குறைந்தது 100 கப்பல்களால் கால்வாயைக் கடந்து செல்ல முடியவில்லை.

