மலேசியாவில் கொள்ளை நோய்க்கு எதிரான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் சமயத்தில் நியூசிலாந்துக்கு 55 நாள் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் எட்மண்ட் சந்தாரா குமார் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தற்போது அமைச்சர் தனிமையில் தங்கியுள்ளார் என்று அவரது செயலாளர் முகம்மது எஃப்பி அர்பான் கூறியுள்ளார். ஜோகூரின் செகாமட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் சந்தாரா குமார் கடந்த வாரம் தாயகம் திரும்பி வீட்டிலிருந்து வேலை ெசய்து வருவதாக வும் அவர் தெரிவித்தார். திரு சந்தாரா குமார், தனது குடும்பத்தினரைப் பார்க்க நியூசிலாந்து சென்றிருந்தார்.
மலேசிய அமைச்சருக்குச் சிக்கல்
1 mins read
செகாமாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டரசு பிரதேச துணை அமைச்சருமான எட்மண்ட் சந்தாரா குமார். படம்: எட்மண்ட் சந்தாரா குமார் ஃபேஸ்புக் -

