'அன்வார் கட்சியுடன் கூட்டணி இல்லை'

'அன்வார் கட்சியுடன் கூட்டணி இல்லை'

2 mins read
dcacf473-4ef4-4f27-bd01-74fa76dd5ce4
அம்னோ கட்சித் தலைவர் அஹமட் ஸாஹிட் ஹமிடி. படம்: த ஸ்டார் -

கோலா­லம்­பூர்: அடுத்த பொதுத் தேர்­த­லில் எதிர்க்­கட்­சி­யான அன்­வார் இப்­ரா­ஹி­மின் கெஅ­டி­லான்(பிகே­ஆர்) கட்­சி­யு­டன் தமது கட்சி கூட்டணி வைக்காது என்று அம்னோ தலை­வர் அஹ­மட் ஸாஹிட் ஹமிடி தெரி­வித்­துள்­ளார்.

இரு கட்­சி­களும் சேர்ந்து போட்டியி­டு­வது குறித்து ஆலோ சிக்கப்பட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்­துள்­ளார்.

வரப்­போ­கும் தேர்­த­லில் தேசிய முன்­ன­ணி­யில் இடம்­பெற்­றுள்ள கட்­சி­க­ளு­டன் மட்டுமே அம்னோ இணைந்து போட்­டி­யி­டும்.

தேர்­த­லுக்­குப் பிறகே பிகே­ஆர் கட்­சி­யு­டன் சாத்­தி­ய­மான உடன்­பாடு குறித்து ஆரா­யப்­படும் என்று திரு ஸாஹிட் குறிப்பிட்டார்.

கடந்த செவ்­வாய்க் கிழமை செய்­தி­யா­ளர் கூட்­டத்ைதக் கூட்­டிய கெஅ­டி­லான் கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம், அம்­னோ­வு­டன் கூட்டு சேரு­வது குறித்து பேசி வரு­வ­தாக அறி­வித்­தார்.

இது, மலே­சிய அர­சி­ய­லில் புதுக் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

ஆனால் இந்த விவ­கா­ரம் குறித்து எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­டன் விவா­திக்­க­வில்லை என்று ஸாஹிட் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

"ஆம், நாடா­ளு­மன்­றத்­தி­லும் திரு­மண நிகழ்ச்­சி­க­ளி­லும் அன்­வாரை நேருக்கு நேர் சந்­தித்­துள்­ளேன். ஆனால் அதி­கா­ர­பூர்­வ­மா­கவோ அதி­கா­ர­பூர்­வ­மற்றோ எந்­த­வித ஆலோ­ச­னை­யும் நடை­பெ­ற­வில்லை.

"என்­னு­டன் மட்­டு­மல்ல, அம்னோ துணைத் தலை­வர் முஹ­மட் ஹச­னு­டன்கூட பேச்சு நடக்­க­வில்லை," என்­றார் அவர்.

இம்­மா­தம் 27, 28 தேதி­களில் அம்னோ உச்­ச­மன்­றக் கூட்­டம் நடை­பெ­ற­வி­ருக்கும் வேளையில் ஸாஹிட் தமது கட்­சி­யின் நிலைப் பாட்டை தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளார்.

1973ல் அமைக்­கப்­பட்ட தேசிய முன்­ன­ணி­யில் அம்னோ அங்­கம் வகித்து வரு­கிறது.

ஒவ்­வொரு தேர்­த­லி­லும் இதே கூட்­ட­ணி­யில் அக்­கட்சி போட்­டி­யிட்டு வரு­கிறது.

அடுத்த பொதுத் தேர்­த­லில் தற்­போ­தைய ஆளும் கட்­சி­யான பெர்­சத்­துக் கட்­சி­யு­டன் கூட்­டணி வைக்­காது என்று பிப்­ர­வரி 19ஆம் தேதி அம்னோ அறி­வித்தது.

தற்­போ­தைய ஒத்­து­ழைப்பு நாடாளு­மன்­றம் கலைக்­கப்­பட்­ட­தும் முடி­வுக்கு வரும் என்று அம்னோ கூறி­யி­ருந்­தது.