கெய்ரோ: உலகின் பரபரப்பான நீர் வழிப் பாதையான சூயஸ் கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் சிக்கிக் கொண்டதால் அவ் வழியாகச் சென்ற கப்பல்கள் பழைய கால்வாய்க்குத் திருப்பி விடப்பட்டன.
நானூறு மீட்டர் நீளமுள்ள சரக்குக் கப்பல் கால்வாயின் குறுக்கே சிக்கியது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் அந்தப் பாதை வழியாகச் செல்ல முடியாமல் தத்தளித்தன என்று கப்பல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டுவந்த 'எவர் கிவென்' எனும் அந்தக் கப்பல் ரோட்டர்டாமை நோக்கிச் சென்றபோது தரைதட்டியது.
இதற்கு மோசமான பருவநிலை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இழுவைப் படகுகள் அதனை மீண்டும் மிதக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக சூயஸ் கால்வாய் பாதையில் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான லேத் ஏஜென்சிஸ் தெரிவித்தது.

