தோக்கியோ: வடகொரியா இன்று இரண்டு ஏவுகணைகளை ஜப்பானுக்கு அருகேயுள்ள கடலுக்குள் பாய்ச்சி சோதனை மேற்கொண்டது. பைடன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், ஜப்பானில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கும் சூழலில் பதற்றத்தை உண்டு பண்ணும் நோக்கிலும் வடகொரியா இந்த ஏவுகணைச் சோதனைகளை நிகழ்த்தியுள்ளதாக ஜப்பான் பிரதமர் சுகா கூறினார். முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் ஏவுகணைச்சோதனை நடத்துவதற்கு வடகொரியாவுக்குத் தடை விதித்துள்ளது. வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டால், வடகொரியாவைக் கட்டுப்படுத்துவது பைடன் நிர்வாகத்திற்குப் புதிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வடகொரியாவின் இந்தப் போக்கு அண்டை நாடுகளுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் ஒரு பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்கா ராணுவத்தின் இந்தோ-பசிபிக் தளபத்தியம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அது வடகொரியாவின் நடவடிக்கையைக் கூர்ந்து கவனித்து வருவதோடு நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறியது. இந்தச் சம்பவம் தென்கொரியாவும் கவலை தெரிவித்துள்ளது.
ஜப்பானுக்கு அருகே ஏவுகணைகள் பாய்ச்சியது வடகொரியா
1 mins read
-

