தாய்–லாந்து: தடுப்–பூசி போட்–டுக் கொண்–டோர் புக்–கெட் வர–லாம்

பேங்­காக்: தாய்­லாந்­தில் ஜூலை 1ஆம் தேதி முதல் தடுப்­பூசி போட்­டுக்ெ­காண்டு புக்­கெட் தீவுக்கு வரும் பய­ணி­கள் தனித்­தி­ருக்க வேண்­டி­ய­தில்லை என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பய­ணி­கள் வரு­கையை ெபரி­தும் நம்­பி­யி­ருக்­கும் தாய்­லாந்­தின் இந்த முடிவு நாட்டை திறந்­து­வி­டு­வ­தன் முதல் அறி­குறி என்று புளூம்­பெர்க் செய்­தித் தக­வல் கூறு­கிறது.

தாய்­லாந்­தில் நேற்று பிர­த­மர் சான் ஓ சா தலை­மை­யில் கூடிய பொரு­ளி­யல் குழு நாட்­டில் பய­ணி­களை வர­வேற்­ப­தற்கு ஏது­வாக புக்ெகட் தீவில் வசிக்­கும் குறைந்­தது 70% மக்­க­ளுக்கு தடுப்­பூசி போட வேண்­டும் என்ற கோரிக்­கையை ஏற்­றது. அந்­தக் கோரிக்­கையை நாட்­டின் தனி­யார் துறை­யும் வர்த்­த­கக் குழு­மங்­களும் முன்­வைத்­தன. தாய்­லாந்­தின் மற்ற பகு­தி­க­ளை­யும் பய­ணி­க­ளுக்கு திறந்­து­வி­டு­வ­தற்கு முன் அந்­தத் திட்­டத்தை புக்­கெட் தீவில் பரி­சோ­தித்­துப் பார்க்க அந்­நாட்டு அர­சாங்­கம் முடிவு செய்­துள்­ள­தாக புளூம்­பெர்க் செய்தி விளக்­கி­யது.

இதற்­குப் பின் மற்­றொரு உல்­லா­சத் தள­மான கோ சமுயி தீவை­யும் தாய்­லாந்து பய­ணி­க­ளுக்கு திறந்­து­வி­டும் எண்­ணத்­தில் இருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கிறது.

இதன்­மூ­லம் கடந்த ஓராண்­டாக வழக்­க­மாக தாய்­லாந்­துக்கு வருகை தரும் மில்­லி­யன் கணக்­கி­லான பய­ணிகள் வராத கார­ணத்­தால் அந்­நாட்­டின் பய­ணத் துறை படு வீழ்ச்சி கண்­டுள்­ளது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் பரவ ஆரம்­பிப்­ப­தற்கு முன் தாய்­லாந்­தின் பொரு­ளி­ய­லுக்கு பய­ணத்­து­றை­யின் பங்கு 20 விழுக்­கா­டாக இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. தாய்­லாந்­தின் இந்த முடி­வால் புக்­கெட் தீவு மற்ற பகு­தி­க­ளை­விட மூன்று மாதம் முன்­னரே திறந்­து­வி­டப்­படும் என்று தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!