எகிப்து ரயில் விபத்தில் 32 பலி; 160க்கும் மேற்பட்டோர் காயம்

எகிப்து ரயில் விபத்தில் 32 பலி; 160க்கும் மேற்பட்டோர் காயம்

1 mins read
0dac945b-30cc-4f1a-b93a-13189272aa33
விபத்துக்குள்ளான ரயில்கள். படம்: ஏஎஃப்பி -

எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 32 பேர் மாண்டனர்.

விபத்தின் காரணமாக 160க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

எகிப்தில் ரயில் கட்டமைப்பு சரியாகப் பராமரிக்கப்படாததால் பல விபத்துகள் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

விபத்துக்குக் காரணமானோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எகிப்தின் அதிபர் அப்துல் ஃபத்தா அல் சிசி உறுதி அளித்துள்ளார்.