'மலாய் சமூக ஒற்றுமை பாதிக்காது'

'மலாய் சமூக ஒற்றுமை பாதிக்காது'

2 mins read
421135b7-3644-4439-b1c1-02a11d95dc91
அம்னோ கூட்டம் ஒருபுறம் நடக்க நாடாளுமன்றத்தின் முன்பு கூடிய நூற்றுக் கணக்கான இளையர்கள், வாக்களிப்பு வயதை 18க்குக் குறைக்கும் நடவடிக்கையை விரைவில் அமல் படுத்த வேண்டும் என்று முழக்கமிட்டனர். படம்: த ஸ்டார் -

கோலா­லம்­பூர்: பிர­த­மர் முகை­தீன் உடனான கூட்­ட­ணியை முறித்­துக் கொண்­டா­லும் மலாய் சமூ­கத்­தின் ஒற்­றுமை பாதிக்­காது என்று அம்னோ வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அம்­னோ­வின் இரண்டு நாள் உச்­ச­மன்­றக் கூட்­டம் நேற்று தொடங்­கி­யது.

அதில் மலாய் சமூ­கத்­தின் ஒற்­று­மையை அர­சி­ய­லாக்­கக் கூடாது என்று கேட்­டுக் கொள்­ளப்­பட்­டது.

பிர­த­மர் முகை­தீன் தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யி­லி­ருந்து விலகு­ வ­தால் மலாய் சமூ­கத்­தின் ஒற்­றுமை பாதிக்­காது. அம்னோ தொடர்ந்து சமூ­கத்­தின் ஒற்­று­மைக்கு பாடு­படும் என்­றும் உச்­ச­மன்­றக் கூட்­டத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

பெர்­சத்­துக் ­கட்­சிக்கு அளிக்­கப்­பட்டு வரும் ஆத­ரவு நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­ட­தும் முடிந்­து ­வி­டும் என்று அம்னோ தலை­வர் ஸாஹிட் ஹமிடி அண்­மை­யில் கூறி­யி­ருந்­தார். அம்­னோ­வில் உள்ள சிலர் இதனை எதிர்க்­கின்­ற­னர். பாஸ் கட்சி உட்­பட மூன்று மலாய் கட்சி களை உள்­ள­டக்­கி தற்­போதைய ஆளும் கூட்­டணி அமைந்­துள்­ளது. இந்­தக் கூட்­ட­ணி­யி­லி­ருந்து அம்னோ வில­கு­வ­தால் சமூ­கத்­தின் ஒற்­றுமை பாதிப்­புக்கு உள்­ளா­கும் என்று அம்­னோ­வில் உள்ள சிலர் ஆவேசமடைந்துள்ளனர்.

ஆனால் மலாய் சமூ­கத்­தின் ஒற்­றுமையை அர­சி­யலாக்கி பிர­த­மர் கட்­சி­யு­டன் கூட்­ட­ணி­யைத் தொடர அழுத்­தம் கொடுக்­கப்­ப­டு­வ­தாக அம்னோ தலைமை குற்றம் சாட்டுகிறது.

கடந்த டிசம்­பர் மாதம் நடக்க வேண்டிய அம்னோ உச்சமன்­றக் கூட்­டம் இரண்டு முறை ஒத்தி வைக்­கப்பட்­டது.

தற்­போது தொடங்­கி­யுள்ள கூட்­ட­மும் வழக்­க­மான ஐந்து நாட்­க­ளி­லி­ருந்து இரண்டு நாட்­களாக குறைக்­கப்­பட்­டுள்­ளது.

துணைத் தலை­வர் முஹ­மட் ஹசன், இளை­யர், இளம் பெண்­கள், மக­ளிர் பிரிவு கூட்­டத்­தைத் தொடங்கி வைத்துப் பேசி­னார்.

பொதுத் தேர்­தல் விரை­வில் நடத்­தப்­பட வேண்­டும் என்று அவர் அறை­கூ­வல் விடுத்­தார்.

இந்­தத் தேர்­த­லில் வெற்றி பெற்­றால் மட்­டுமே ஆட்சி அதிகாரத்­துக்கு அம்னோ மீண்­டும் திரும்ப முடி­யும்.

நேற்று நடை­பெற்ற கூட்­டத்­தில் வரு­கின்ற பொதுத் தேர்­த­லில் பாஸ் கட்­சி­யு­டன் மட்­டுமே கூட்­டணி வைக்க விரும்­பு­வ­தாக அம்னோ அறி­வித்­தது. பிர­த­மர் பத­வியை குறி வைக்­கும் மற்ற கட்­சி­களை புறக்­க­ணிப்­ப­தா­க­வும் அது கூறி­யுள்­ளது. இத­னால் பிர­த­மர் முகை­தீ­னின் பெர்­சத்து, எதிர்க்­கட்­சி­யான கெஅடிலான் ஆகிய கட்­சிகளுடன் கூட்­டணி இல்லை என்­பதை அம்னோ தெளி­வு­ப­டுத்தியுள்­ளது.