சூயஸ் கால்வாயில் கப்பலை மிதக்கச் செய்ய பெருமுயற்சி

சூயஸ் கால்வாயில் கப்பலை மிதக்கச் செய்ய பெருமுயற்சி

1 mins read
c442e0a0-d48a-403b-89bb-8fec91bcf666
தரை தட்டியுள்ள கப்பலை ஆய்வு செய்யும் அதிகாரிகள். படம்: நியூயார்க் டைம்ஸ் -

வாஷிங்­டன்: சூயஸ் கால்­வா­யில் தரை­தட்­டி­யுள்ள ஆக நீள­மான கப்­பலை மீண்­டும் மிதக்­கச் செய்­வ­தற்­கான முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

விரை­வில் கப்­பல் மிதக்­கச் செய்­யப்­படும் என்று அதன் ஜப்­பா­னிய உரி­மை­யா­ளர்­கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஷோயி கிசென் தலை­வர் யூகிடோ ஹிகாகி பத்து இழு­வைப் பட­கு­கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தார்.

அமெ­ரிக்­கா­வும் கடற்படை நிபுணர்களை அனுப்பி உதவி செய்ய முன்வந்­துள்­ளது.

கடந்த செவ்­வாய்க் கிழமை சூயஸ் கால்­வா­யைக் கடந்து சென்­ற­போது 'எவர்­கி­ரீன்' கப்­பல் சிக்­கிக் கொண்­டது. இத­னால் அவ்­வ­ழி­யா­கச் சென்ற கப்­பல்­கள் திருப்­பி­வி­டப்­பட்­டுள்­ளன.