உலகம் முழுவதும் அரை பில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

உலகம் முழுவதும் அரை பில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

1 mins read
9bc72aa6-644f-4248-8488-8f64136eb22e
-

பாரிஸ்: உலக முழு­வ­தும் 510 மில்­லி­யன் பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

இதன் தொடர்பில் நாடு ­களுக்கு இடையே பெரிய இடை­வெளி காணப்­ப­டு­வதாகக் கூறிய உலக சுகா­தார நிறு­வ­னம், ஏழை நாடு­க­ளுக்கு பணக்­கார நாடு­கள் தடுப்­பூ­சி­களை நன்­கொ­டை­யாக வழங்கி உதவ வேண்­டும் என்று கேட்­டுக் கொண்­டது.

தடுப்­பூ­சி­ போடப்­பட்டு வந்­தா­லும் ஐரோப்­பிய நாடு­க­ளி­லும் தென் அமெ­ரிக்­கா­விலும் கொள்­ளை­நோய் இன்­ன­மும் வேகமாகப் பரவி வரு­கிறது. பிரே­சி­லில் மட்­டும் கிரு­மித் தொற்­றி­னால் 300,000 பேர் வரை மடிந்துள்ளனர்.

மெக்­சி­கோ­வில் உயி­ரி­ழப்பு 200,000ஐ தாண்­டியது.