மியன்மாரில் ரத்தக்களரி: உலக நாடுகள் கண்டனம்

மியன்மாரில் ரத்தக்களரி: உலக நாடுகள் கண்டனம்

2 mins read
8aba8824-dc30-43cb-b0d7-3a4edbf1dc25
-

யங்கூன்: மியன்­மார் ராணு­வம் ஒரே நாளில் நூற்­றுக்கு மேற்­பட்­டோ­ரைக் கொன்று குவித்­த­தற்கு அமெ­ரிக்கா உள்­ளிட்ட 12 நாடு­க­ளின் ராணு­வத் தலை­வர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­து உள்­ள­னர்.

மக்­க­ளின் நம்­ப­கத்­தன்­மையை மியன்­மார் ராணு­வம் இழந்­து­விட்­டது என்­றும் அவர்­கள் கூறி­ உள்ளனர்.

மியன்­மா­ரில் கடந்த பிப்­ர­வரி 1ஆம் தேதி ஜன­நா­யக ஆட்­சி­யைக் கவிழ்த்து, நிர்­வா­கத்தை ராணு­வம் கைப்­பற்­றி­யது. அதனை எதிர்த்து, அங்கு தொடர்ந்து ஆர்ப்­பாட்­டங்­களும் பேர­ணி­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.

அதனை ஒடுக்க ராணு­வம் ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்தி வந்­தா­லும் ஜன­நா­யக ஆத­ரவு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் அச­ரா­மல் தொடர்ந்து தங்­க­ளது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், மியன்­மா­ரில் நேற்று முன்­தி­னம் ஆயு­தப்­படை நாள் அனு­ச­ரிக்­கப்­பட்ட நிலை­யில், குழந்­தை­கள் உட்­பட 114 பேரைப் பாது­காப்­புப் படை­யி­னர் கொன்று குவித்­த­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இதை­ய­டுத்து, ஆட்­சிக் கவிழ்ப்­பிற்­குப் பிறகு, ஆக மோச­மாக ரத்­தக் கறை படிந்த நாளாக அது அமைந்­து­விட்­டது.

இந்­நி­லை­யில், அத­னைக் கண்­டித்து அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, கனடா, டென்­மார்க், ஜெர்­மனி, கிரீஸ், இத்­தாலி, ஜப்­பான், நெதர்­லாந்து, நியூ­சி­லாந்து, தென்­கொ­ரியா, பிரிட்­டன் ஆகிய நாடு­களின் ராணு­வத் தலை­வர்­கள் கூட்­ட­றிக்கை ஒன்றை வெளி­யிட்டுள்­ள­னர்.

அதில், "தற்­காப்­புப் படை­களின் தலை­வர்­க­ளாக, ஆயு­த­மின்றி போரா­டிய மக்­கள் மீது மியன்­மார் ஆயு­தப் படை­யும் துணை பாது­காப்புப் படை­களும் ஆபத்­தான ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­தைக் கண்­டிக்­கிறோம்," என்று அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

முன்­ன­தாக, அந்­நா­டு­க­ளின் தூதர்­களும் மியன்­மார் ராணு­வத்­தின் ரத்­தக்­க­ள­ரிக்­குக் கண்­ட­னம் தெரி­வித்­தி­ருந்­தனர்.

ஆயி­னும், தன் மீதான கண்­ட­னங்­க­ளை­யும் விமர்­ச­னங்­க­ளை­யும் கண்­டு­கொள்­ளாத மியன்­மார் ராணு­வம், எதிர்ப்­பா­ளர்­களை ஒடுக்­கு­வ­தி­லேயே குறி­யாக இருக்­கிறது.

'கொன்­றொ­ழிப்பு நட­வ­டிக்கை'

ஒரே நாளில் நூற்­றுக்கும் மேற்­பட்ட உயிர்­களை இழந்­த­தற்­காக துக்­கம் அனு­ச­ரித்து வந்­தா­லும், ராணுவ ஆட்­சியை முடி­விற்­குக் கொண்டு வரும் வரை தொடர்ந்து போராட மியன்­மார் ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­கள் உறு­தி­பூண்­டுள்­ள­னர்.

"இந்­தப் புரட்­சி­யில் உயிர்­நீத்த எங்­க­ளின் நாய­கர்­க­ளுக்­குத் தலை­வ­ணங்­கு­கி­றோம். இந்தப் ­புரட்சியில் நாம் வென்றாக வேண்­டும்," என்று போராட்­டக் குழுக்­களில் முதன்­மை­யா­ன­தா­கக் கூறப்­படும் 'ஜிஎஸ்­சி­என்' குழு ஃபேஸ்புக் வழி­யா­கத் தெரி­வித்து இருக்­கிறது.

இதற்­கி­டையே, மியன்­மார் ராணு­வம் மக்­க­ளைக் 'கொன்று ஒழிக்­கும் நட­வ­டிக்கை'யில் ஈடு­பட்டு வரு­வ­தாக ஐநா புல­னாய்­வா­ளர் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார்.

"இந்த ரத்­தக்­க­ளரி பயங்­க­ர­மா­ன­தாக இருக்­கிறது. எனி­னும், ராணுவ ஆட்­சி­யின்­கீழ் வாழ விரும்­ப­வில்லை என்­ப­தில் மியன்­மார் மக்­கள் தெளி­வாக உள்­ள­னர்," என்­கிறார் ஐநா தூதர் தாமஸ் வய்டா.

மியன்மார் வரலாற்றில் கடந்த சனிக்கிழமை ஒரு பயங்கரவாத, அவமதிப்பு நாளாக என்றென்றும் பொறிக்கப்பட்டிருக்கும் என்று மியன்மாருக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பேராளர் குழு குறிப்பிட்டுள்ளது.