பார்சிலோனாவில் இசைமழையில் நனைந்த 5,000 பேர்

பார்சிலோனாவில் இசைமழையில் நனைந்த 5,000 பேர்

1 mins read
ece85036-2e2c-4ead-86c5-f0d18bfb7777
-

பார்­சி­லோனா: ஸ்பெ­யி­னின் பார்­சி­லோனா நக­ரில் மக்­கள் கொவிட்-19 நோய்த்­தொற்­றுச் சூழ­லைப் பொருட்­ப­டுத்­தா­மல் இசைமழை­யில் நனைந்­த­னர்.

நேற்று முன்­தி­னம் இரவு அந்­ந­க­ரில் ஏறத்­தாழ 5,000 பேர் 'ராக்' இசை நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­னர். நிகழ்ச்­சிக்­கான அனைத்து நுழை­வுச்­சீட்­டு­களும் சற்று நேரத்­தில் விற்­றுத்­தீர்ந்­தன.

விரைவு நோய்த்­தொற்­றுப் பரி­சோ­தனை செய்­து­கொண்­ட­வர்­கள் அந்த இசை நிகழ்ச்­சிக்கு அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். தங்­க­ளது கைபே­சிச் செய­லி­யில் பரி­சோ­தனை முடி­வு­களை ரசி­கர்­கள் 15 நிமி­டங்­க­ளுக்­குள் பெற்­றுக்­கொண்­ட­னர்.

முகக்­க­வ­சம் அணிந்த ரசி­கர்­களை மட்­டும் நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்­கள் அனு­ம­தித்­த­னர்.

இதய நோய், புற்­று­நோய், அண்­மை­யில் கொவிட்-19 நோய்த்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் போன்­றோர் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்க அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

கொவிட்-19 சூழலை மறந்து இது­போன்ற நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­றது தங்­க­ளுக்கு அள­வற்ற மகிழ்ச்சி தரு­வ­தாக ரசி­கர்­கள் தெரி­வித்­த­னர். நிகழ்ச்சி அற்­பு­த­மாக இருந்­த­தா­க­வும் அனைத்து நேரத்­தி­லும் தாங்­கள் பாது­காப்­பாக இருந்­த­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

பாது­காப்பு நடை­மு­றை­க­ளைப் பின்­பற்றி இது­போன்ற ஒன்­று­கூடல் நிகழ்ச்­சி­களைப் படிப்படியாக நடத்த ஸ்பெ­யின் அதி­கா­ரி­கள் திட்­ட­மிட்டு வரு­கின்­ற­னர்.